ஓயாத காற்றழுத்த தாழ்வு..வலுபெற்றுக் கொண்டு போகும் மழை

rain tamilnadu delta
By Jon Jan 16, 2021 05:57 AM GMT
Report

குமரி கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் பரவலாக தொடர்ந்து மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி கடல் பரப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது.

மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யுமென வானிலை மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், திருச்சி, உள்ளிட்ட7 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று புயலாக மாறாது என்றும், அடுத்தடுத்த நாட்களில் கேரளா நோக்கி நகரும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் வருகிற 16 ஆம் தேதி தமிழகத்தின் ஓரிரு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் குறிப்பிட்டுள்ளார்.