ஜனவரியிலும் தொடரும் மழை.! தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

By Jon Jan 08, 2021 12:16 PM GMT
Report

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஜனவரி மாதம் ஆகியும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடித்து வருகிறது.

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் நெல்லை, மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை, திருச்சி, தஞ்சை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.