தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்!

Rain Tamilnadu
By Thahir Jul 02, 2021 08:01 AM GMT
Report

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்! | Rain Tamilnadu

தமிழகத்தின் பல மாவட்டங்களில், வரும் 5ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம்.தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, வரும் 5ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்புள்ளது.

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார், மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், இன்று பகல் வரையிலும் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்! | Rain Tamilnadu

தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை, விருதுநகர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்யும். நாளை முதல் இரண்டு நாட்களுக்கு, வட மாவட்டங்களில், இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யலாம்.

தென் மேற்கு, மத்திய மேற்கு மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில், வரும் 5ம் தேதி வரை மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும்.

இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.