வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்கள் உட்பட சில மாவட்டங்களின் இடி,மின்னலுடன் கன மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.அடுத்த 24 மணி நேரத்திற்கு தேனி,திண்டுக்கல்,மதுரை,சிவகங்கை,புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழையும்,ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் நகரின் சில பகுதிகளில் ,மிதமான மழை பெய்யக்கூடும். தென் மேற்கு,மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.