தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

Rain Tamilnadu
By Thahir Jun 21, 2021 09:16 AM GMT
Report

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 5 நாட்கள் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! | Rain Tamilnadu

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழத்தின் வட கடலோரம் மற்றும் உள்மாவட்டங்கள் கோவை,நீலகிரி.திண்டுக்கல்,தேனி மிதமான மழை பெய்யக்கூடும்.நாளை கோவை,நீலகிரி,தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,நாளை மறுநாள் நீலகிரி,கோவை,மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் இரண்டு நாட்களுக்கு நகரின் முக்கிய பகுதிகளில் இடி,மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அரபிக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.