இந்திய அணியின் திட்டத்தில் மண்ணை அள்ளிப் போட்ட மழை - 2 ஆம் நாள் ஆட்டம் பாதிப்பு
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 ஆம் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்களில் ஆல் அவுட்டானது.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21ரன்கள் எடுத்தது. இதனிடையே இன்று 2 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் அரைசதம் அடித்தார். ரோகித் சர்மா 36 ரன்களும், கேப்டன் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமலும், ரஹானே 5 ரன்களிலும், புஜாரா 4 ரன்களிலும் ஆட்டமிழக்க 46.4 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.
தொடர்ந்து அங்கு மழை பெய்து வரும் காரணத்தால் 2 ஆம் நாள் ஆட்டம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இரண்டாம் நாளில் சிறப்பாக ஆடி இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்ற இந்திய அணியின் திட்டத்தில் மழை பேரிடியாக இறங்கியுள்ளது.

Optical illusion: குட்டீஸ் உங்கள் கண்களை சோதிக்கலாம்...இதில் வாத்துக் குஞ்சு எங்கே மறைந்துள்ளது? Manithan

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
