கனமழை எதிரொலி: புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று புதுச்சேரியில் காலை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை இயக்நரின் அறிவுறுத்தல் படி புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இன்று அதிகாலை முதல் 19 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இந்த மழையின் காரணமாக பொதுமக்கள் வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். கனமழை காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது.