இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறுவதில் புதிய சிக்கல்; சோகத்தில் ரசிகர்கள்

Colombo Indian Cricket Team Pakistan national cricket team T20 World Cup 2026
By Karthikraja Feb 14, 2026 09:13 AM GMT
Report

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறுவதில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி

2026 T20 உலக கிண்ண தொடரின் கொழும்புவில் நாளை நடைபெற உள்ள லீக் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளது. 

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறுவதில் புதிய சிக்கல்; சோகத்தில் ரசிகர்கள் | Rain Possibility In Colombo India Vs Pakistan T20

இந்தியா உடன் விளையாட மறுத்த பாகிஸ்தான், ஐசிசியின் அழுத்திற்கு பின்னர் விளையாட சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், போட்டிக்கான எதிர்பார்ப்பு வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இருந்து கொழும்பு செல்ல விமான கட்டணம் பல மடங்கும் அதிகரித்திருந்தாலும், போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் கொழும்பு விரைந்துள்ளனர். 

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறுவதில் புதிய சிக்கல்; சோகத்தில் ரசிகர்கள் | Rain Possibility In Colombo India Vs Pakistan T20

மேலும், டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் போட்டியை காண கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

ஆனால், போட்டியின் போது மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக வெளியான வானிலை அறிக்கை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

மழைக்கு வாய்ப்பு  

வங்காள விரிகுடாவில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை குறித்து இலங்கை வானிலை ஆய்வுத்துறை எச்சரித்துள்ளதால் மழை போட்டியில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

கொழும்பின் கெட்டராம பகுதியில் உள்ள ஆர் பிரேமதாச மைதானத்தில் போட்டி 7 மணிக்கு தொடங்க உள்ளது. 

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறுவதில் புதிய சிக்கல்; சோகத்தில் ரசிகர்கள் | Rain Possibility In Colombo India Vs Pakistan T20

பிரபகலுக்கு மேல் பரவலான மழை பெய்ய உள்ளது. 50 - 70 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சில மாதிரிகள் தெரிவிக்கின்றன.

இதனால் போட்டி தொடங்க தாமதமாகலாம் அல்லது ஓவர்கள் குறைக்கப்படலாம். சில கணிப்புகள் இரவு 8 மணிக்குப் பிறகு லேசான தெளிவுப் போக்கைக் குறிக்கின்றன.

அதேவேளையில், மழை பெய்தாலும் அதை கையாளக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானம், கனமழை நின்ற 45 முதல் 60 நிமிடங்களுக்குள் விளையாடுவதற்கு ஏற்றதாகிவிடும்.

ஓமன் - இலங்கைக்கு இடையேயான போட்டியில், போட்டி முடிவடைந்த பின்னர் மழை பெய்தது. இதுவரை, இந்த டி20 உலகக்கிண்ணத்தில் இலங்கையில் நடைபெற்ற எந்தப் போட்டியும் மழையால் பாதிக்கப்படவில்லை.