வங்கக் கடலில் உருவாகிறது புதிய புயல் - தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Meteorological Center Warning rain-new-storm
By Nandhini Dec 02, 2021 03:36 AM GMT
Report

அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது.

இதைத்தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயலுக்கு ஜாவத் (jawad) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு மேலும் தீவிரமடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா, ஒடிசா அருகே 4ம் தேதி காலை வரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. 

வங்கக் கடலில் உருவாகிறது புதிய புயல் - தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | Rain New Storm Meteorological Center Warning