தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கி வரும் கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், சேலம், கடலுார், தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
வளிமண்டல சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணிநேரத்திற்கும் மேல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இதே போன்று கடலூர் மாவட்டத்திலும் நேற்று நள்ளிரவில் சூறைகாற்றுடன் கூடிய கனமழை பெய்தது.இந்த கனமழையால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் பெய்த கனமழையால் 2 வீடுகள் மற்றும் 3 மின்கம்பங்கள் சேதமடைந்தன. மேலும் பல இடங்களில் மரங்களும் முறிந்து விழுந்தது.