மழைக்கால விடுமுறை: பள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ் - அமைச்சர் அன்பில்
சனிக்கிழமை வகுப்பு நடத்துவது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
விடுமுறை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் எதிர்பார்க்காத அளவில் அதி கனமழை பெய்த வண்ணம் உள்ளது.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக
சனிக்கிழமை வகுப்பு
மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அறிவிப்புகள் வெளியாவது வழக்கம். இந்நிலையில், அமைச்சர் அம்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.
அதில், மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முடிவு செய்து அறிவிப்பு வெளியிடலாம் என அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், விடுமுறை விடப்பட்ட நாட்களுக்கு ஈடு செய்யும் விதமாக தேவைப்படும் இடங்களில் சனிக்கிழமைகளில் வகுப்புகளாஇ நடத்துவது குறித்தும் கலெக்டர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.