சென்னையில் ஒரு மழைக்காலம் .. அதிகாலையில் மீண்டும் மழை
Chennai
By Irumporai
இன்று காலை சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெயது வருகிறது.
சென்னையில் கன மழை
சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெப்பம் சற்று தணிந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
மழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று அதிகாலையில் சில இடங்களில் மழை பெய்தது , எழும்பூர், புரசைவாக்கம், சென்டர்,சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் அதிகாலை லேசான மழை பெய்தது.