தென்மேற்கு பருவமழை நீடிக்க வாய்ப்பில்லை: தேசிய வானிலை மையம்
வட மாநிலங்களில் தென்மேற்கு பருவ காற்று மெதுவாக முன்னேற்றி வருவதால் மழை நீடிக்காது என தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
வட மாநிலங்களில் தென்மேற்கு பருவ காற்று மெதுவாக முன்னேறும் எனவும், இதனால் நீடித்த மழைக்கு வாய்ப்பில்லை என்றும் தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம் தெரிவிக்கிறது. ராஜஸ்தான், மேற்கு உத்தரப் பிரதேசம், ஹரியாணா, சண்டிகர், டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்றின் முன்னேற்றம் மிக மெதுவாக இருக்கும். இதனால் நீடித்த மழைக்கு வாய்ப்பில்லை.
தென்கிழக்கு உத்தரப் பிரதேசம் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக கிழக்கு உத்தரப் பிரதேசம் மற்றும் பிஹாரில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யலாம்.
அதன்பின் மழை குறையும்.மேற்கு பகுதி காற்றின் தாக்கம் காரணமாக உத்தரகாண்ட்டில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யலாம். அதன்பின் மழை குறையும்.