வேலூரில் திடீர் மழை பொது மக்கள் மகிழ்ச்சி!
rain
tamilnadu
vellore
By Irumporai
வேலூர் மாநகர் பகுதிகளில் திடீரென பெய்த மழையால் பொது மக்கள் மகிழ்ச்சி. அக்னி வெயில் முடிந்தும் வேலூர் மாவட்டத்தில் அதிகபடியான வெப்பம் நிலவிவருகிறது.
இன்றும் 102.7 டிகிரி ஃபெரன் ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவானது. அதிக வெப்பம் காரணமாக பொது மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகிய நிலையில் இன்று இரவு திடீரென வேலூர் மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய தொடங்கியது.
சுமார் 1 மணி நேரத்திற்க்கு மேலாக விட்டு விட்டு பெய்த கனமழையால் குளிந்த சூழல் நிலவியதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால் மாநகர் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்து வருவதால் மழை நீர் தேங்கி பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.