அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Chennai TN Weather Weather
By Thahir Jan 29, 2023 03:08 PM GMT
Report

அடுத்த 5 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி 

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நீடிக்கிறது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 30.01.2023 அன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடைந்து 01.02.2023 அன்று இலங்கை கடற்பகுதிகளை சென்றடையக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்பு 

29.01.2023 மற்றும் 30.01.2023: தமிழக கடலோர மாவட்டங்கள். அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

rain-in-tamil-nadu-for-next-5-days

31.01.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

01.02.2023: தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

02.02.2023: தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.