கடும் குளிரில், கொட்டும் மழையில் உயிரை பணயம் வைத்து மின் வயர்களை சரி செய்த ஊழியர்கள்...!

Tamil nadu Viral Video
By Nandhini Dec 09, 2022 11:26 AM GMT
Report

கடும் குளிரில், கொட்டும் மழையில் உயிரை பணயம் வைத்து மின் வயர்களை சரி செய்த ஊழியர்களின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மின் வயர்களை சரி செய்த ஊழியர்கள்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்ததால், தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொடைக்கானலில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தொடர்ந்து மழை பெய்தாலும் தங்களை உயிரை பணயம் வைத்து மின்சார ஊழியர்கள் மின் வயர்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

rain-in-kodaikanal-viral-video