சட்டென்று மாறுது வானிலை... சென்னையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி

Tamil nadu
By Petchi Avudaiappan May 10, 2022 03:32 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

சென்னையின் பல பகுதிகளில் இன்று அதிகாலை பரவலாக மழை பெய்ததால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. 

வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள அசானி புயலானது ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரை பகுதியைக் கடக்காமல் மீண்டும் கடலை நோக்கி திரும்பும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை பரவலாக மழை பெய்து வருகிறது. 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இந்த மழை மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

அதேசமயம் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் சிறிது அவதிக்குள்ளாயினர்.