துளி துளி துளி மழையாய் வந்தாளே : அடுத்த 3 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு

By Irumporai May 21, 2023 04:00 AM GMT
Report

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

 கன மழை

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகிற லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

துளி துளி துளி மழையாய் வந்தாளே : அடுத்த 3 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு | Rain In 5 Districts In Next 3 Hours

அதிலும் இன்று (மே 21) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளது.