தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

Flood disaster air
By Jon Feb 27, 2021 12:55 PM GMT
Report

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நெல்லை, சேலம், தேனி, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தில் 19 செண்டி மீட்டர் மழையும், மணிமுத்தாறு, குறிஞ்சிப்பாடியில் தலா 10 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.