தொடரும் கன மழை - நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை?
கன மழை காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல்
வங்ககடலில் உருவான “ஃபெஞ்சல்” புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்தது.
நேற்று புயல் கரையை கடக்க தொடங்கிய நிலையில், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மாலை வரை பலத்த காற்றுடன் பெய்த கன மழை அதன்பின் படிப்படியாக குறைந்துள்ளது.
விடுமுறை
தற்போது புயலானது கடலூருக்கு வடக்கே 30 கிலோ மீட்டர் தொலைவிலும், விழுப்புரத்திற்கு கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நாளை(02.12.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர், சேலம், திருப்பத்தூர், தருமபுரி, ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.