தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

By Irumporai Dec 16, 2022 03:22 AM GMT
Report

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை  

நாளை முதல் 19ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல் | Rain For 4 Days In Tamil Nadu

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என அறிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் தகவல்

அதேபோல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.