தணியும் வெயிலின் தாக்கம் - வரும் 8-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

Chennai TN Weather Weather
By Karthick Aug 05, 2023 08:50 AM GMT
Report

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது

லேசான மழை 

rain-expected-till-8th-of-this-month

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 8-ஆம் தேதி வரை ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 

அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

வரும் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7