தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

TN Weather
By Swetha Subash May 27, 2022 08:32 AM GMT
Report

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள மழை குறித்த அறிக்கையில்,

“வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் இன்று கனமழை பெய்யலாம்.

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! | Rain Expected In Tamilnadu For The Next 4 Days

தேனி, திண்டுக்கல், காரைக்கால், புதுச்சேரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.

நாளை 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யலாம். சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.