அரசின் நடவடிக்கையால் மழை பாதிப்பு குறைந்துள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin Government of Tamil Nadu Government Of India Michaung Cyclone
By Thahir Dec 05, 2023 07:17 AM GMT
Report

கடந்த காலங்களை விட இம்முறை மழையின் பாதிப்பு குறைவுதான். தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மழையின் பாதிப்பின் தாக்கம் குறைந்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மழை பாதிப்பு குறைந்துள்ளது 

மழை பாதிப்பு பகுதிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள பேரிடர் கால கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார்.

அரசின் நடவடிக்கையால் மழை பாதிப்பு குறைந்துள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Rain Damage Has Reduced Chief Minister M K Stalin

இதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 2015-ல் ஏற்பட்டது செயற்கை வெள்ளம். ஆனால் இம்முறை சென்னை எதிர் கொண்டது இயற்கை வெள்ளம். ஆனாலும் கடந்த காலங்களை ஏற்பட்ட பாதிப்புகளை விட இம்முறை சென்னையில் பாதிப்பு குறைவாகவே ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இயல்புநிலை வெகு விரைவில் திரும்ப மீட்பு பணி துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது.மழை நிற்பதற்கு முன்பே வெளி மாவட்ட பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.  

5000 கோடி தேவை 

தமிழக அரசின் சார்பில் 4000 கோடிக்கு சென்னையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளால் தான் மழை பாதிப்பு குறைந்துள்ளது. 2015-ம் ஆண்டு மழையின்போது 119 பேர் பலியான நிலையில் இம்முறை அதிகம் மழை பெய்தும் ஏழு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

அரசின் நடவடிக்கையால் மழை பாதிப்பு குறைந்துள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Rain Damage Has Reduced Chief Minister M K Stalin

மழை பாதித்த ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த 61,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 11 லட்சம் உணவு, ஒரு லட்சம் பால் பாக்கெட்டுகள் நிவாரண முகாம்களுக்கு வழங்கப்பட்டுள்ளன சென்னையில் மழை பாதிப்பு நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் 5000 கோடி கேட்கப்படும்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.