மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத் தொகை எவ்வுளவு ? - அமைச்சர் வெளியிட்ட முக்கியத் தகவல்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் கேகே. எஸ் எஸ் ஆர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ 4,800 நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.
மேலும் குடிசை முழுவதுமாக இடிந்திருந்தால் ரூ 5,000 வழங்கப்படும் எனவும்கான்கீரிட் வீடு இடிந்திருந்தால் ரூ 95,000 என்றும் குடிசை வீட்டிற்கு 4,100 என்றும் தெரிவித்துள்ளார்.
அதே போல் பசு, எருமைகள் உயிரிழந்திருந்தால் ரூ 30 ஆயிரம் நிவாரணம் வழங்க ஏற்கனவே அரசு விதியில் உள்ளதாக கூறினார்.
தற்போது கடலூர் , மயிலாடுதுறை மாவட்டங்களில் கன மழை காரணமாக இது வரை 2 பேர் இறந்துள்ளதாகவும் தமிழகத்தில் மழை காரணமாக 35 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.