வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - நாளை வெளுக்கப்போகும் மழை!

Tamil nadu TN Weather Cyclone
By Vidhya Senthil Nov 24, 2024 05:00 PM GMT
Report
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 தாழ்வு பகுதி

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளின் மேல் கடந்த 21ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது.

tamilnadu rain update

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 25ஆம் தேதி தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2025ம் ஆண்டிற்கான பொது விடுமுறை -மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா?

2025ம் ஆண்டிற்கான பொது விடுமுறை -மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா?

கனமழை

மேலும் திங்கட்கிழமை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை,

tamilnadu rain update

ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.