மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் - ஆய்வுகளை தொடங்கியது மத்திய குழு
காவிரி டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்யும் பணிகளை மத்திய குழு தொடங்கியுள்ளது.
ஆய்வை தொடங்கியது மத்திய குழு
யூனிஸ், பிரபாகரன், போயா ஆகியோரை கொண்ட மத்திய குழு நாகை தலைஞாயிறில் ஆய்வை தொடங்கியுள்ளது.
பயிர் சேதங்களை ஆய்வு செய்து குழு கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய ஈரப்பதம் குறித்து அனுமதி அளிக்கும்.
நாகை தலைஞாயிறை தொடர்ந்து கட்சநகரம், வலிவலம், பட்டமங்கலம், சிராங்குடிபுலியூர் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
22% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்த நிலையில், மத்திய குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
தலைஞாயிறு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த மத்திய குழுவிடம் விசாயிகள் கோரிக்கை வைத்தனர்.