‘’ அடை மழை வரும் அதில் நனைவோமே ‘’ : தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் மழை , வானிலை ஆய்வு மையம் தகவல்
tamilnadu rain
meteorologicalcenter
next3hours
By Irumporai
தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி,தென்காசி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இந்நிலையில்,இன்று 13.02.2022 - தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.