ரயிலில் மூத்த குடிமக்களுக்கு இவ்வளவு சலுகையா - அவசியம் நோட் பன்ணுங்க
ரயிலில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் இதோ..
ரயில் பயணம்
ரயிலில் ஸ்லீப்பர், ஏசி 3 டயர் மற்றும் ஏசி 2 டயர் பெட்டிகளில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் லோயர் பெர்த்கள் வழங்கப்படுகின்றன.

ரயில் புறப்பட்ட பிறகும் ஏதேனும் கீழ் பெர்த் காலியாக இருந்தால், அது மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும். முக்கியமான ரயில் நிலையங்களில் மூத்த குடிமக்களுக்கு இலவச சக்கர நாற்காலிகள் வசதி உள்ளது.
சலுகை
மூத்த குடிமக்களின் பேக்குகளை எடுத்து செல்ல போர்ட்டர்களும் உள்ளனர். அனைத்து ரயில் நிலையங்களிலும் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பயணிகளுக்காக ரயில் நிலையங்களில்

தனி டிக்கெட் முன்பதிவு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளூர் ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பெரிய ரயில் நிலையங்களில் பேட்டரியால் இயக்கப்படும் கார்கள் (கோல்ஃப் வண்டிகள்) இலவசமாக கிடைக்கின்றன.
இந்த வண்டிகள் ரயில்களின் வாசலுக்கே வந்து விடுவதால் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிக நேரம் நடக்க வேண்டிய அவசியம் இல்லை.