ஊரடங்கு சமயத்தில் ரயில் முன்பதிவு மையங்கள் இயங்காது

train ticket railway book
By Praveen Apr 23, 2021 04:15 PM GMT
Report

தமிழகத்தில் ஊரடங்கு சமயத்தில் ரயில் முன்பதிவு மையங்கள் இயங்காது என்ற தாவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போது தொற்று எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்த நிலையில், கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, கடந்த 20-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும். அதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் ஏப்ரல் 25-ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நாள்களில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படாது.

எனினும், ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு மற்றும் ரத்து செய்து கொள்ளலாம். முன்பதிவு அல்லாத டிக்கெட் வழங்கும் மையங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.