இந்தியாவில் பெயரே இல்லாத ரயில்வே ஸ்டேஷன் - மர்மமான நடைமுறை
மேற்கு வங்க மாநிலம், வர்த்தமான் மாவட்டத்தில் உள்ள ரெய்னா (Raina) மற்றும் ரெய்னாகர் கிராமங்களுக்கு இடையே இந்த ரயில் நிலையம் அமைந்துள்ளது.
ரெய்னாகர்
2008-ஆம் ஆண்டு இந்த நிலையம் தொடங்கப்பட்டபோது, இதற்கு 'ரெய்னாகர்' என்று பெயரிடப்பட்டது. ஆனால், ரெய்னா கிராமத்தைச் சேர்ந்த மக்கள், இந்த நிலையம் தங்கள் கிராமத்தின் நிலத்தில்தான் அமைந்துள்ளது.

என்பதால், இதற்கு 'ரெய்னா' என்றுதான் பெயரிட வேண்டும் எனப் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து ரெய்னாகர் மற்றும் ரெய்னா ஆகிய இரு கிராமங்களுக்கு இடையே பெயரிடுவதில் பெரும் சர்ச்சை வெடித்தது.
என்ன நிலவரம்
இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றதால், இந்திய ரயில்வே தற்காலிகமாக அந்த நிலையத்தின் பெயர்ப் பலகையில் இருந்து ரெய்னாகர் என்ற பெயரை நீக்கியது.
இன்று வரை அங்கு எந்தப் பெயர்ப் பலகையும் வைக்கப்படவில்லை. பெயர்ப்பலகை இல்லாவிட்டாலும், பயணிகள் டிக்கெட் வாங்கும்போது மட்டும் 'ரெய்னாகர்' என்ற பெயரிலேயே டிக்கெட்டுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.