நடைமேடையில் படுத்திருந்த சிறுவனை பூட்ஸ் காலால் உதைத்த போலீஸ் - வைரலாகும் வீடியோ!
உத்தர பிரதேசத்தில் நடைமேடையில் படுத்திருந்த சிறுவனை போலீஸ் ஒருவர் தனது காலால் எட்டி உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் செய்த காரியம்
உத்தரபிரதேச மாநிலம், பெல்டாரா சாலையில் உள்ள ரயில் நிலையத்தில் சிறுவர் ஒருவர் நடைமேடையில் படுத்திருந்தார். அப்பொழுது அங்கு வந்த போலீஸ்காரர் தனது பூட்ஸ் காலால் உதைப்பது போன்ற காட்சிகள் உள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அதில் ரயில்வே பாதுகாப்பு படையை சேர்த்த போலீசார் இந்த காரியத்தை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைரல் வீடியோ
இந்நிலையில், இந்த வீடியோ பரவிய நிலையில், அந்த போலீசாருக்கு மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதுபோன்ற உரிமைகளை காவல்துறைக்கு கொடுத்தது யார்? என்றும் கேள்விகளை எழுப்பி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
बलिया में RPF के जवान द्वारा बच्चे को मारने का वीडियो,बच्चे को बेरहमी से मारने का वीडियो वायरल,रेलवे स्टेशन प्लेटफार्म पर सो रहा था बच्चा,बच्चे के शरीर पर पैर रखकर धकेला गया,बेल्थरा रेलवे स्टेशन का बताया जा रहा वीडियो. @RPF_INDIA @AshwiniVaishnaw pic.twitter.com/2KzQs99Bsl
— Vineet Gupta (@aapka_vineet) July 16, 2023
மேலும், இது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், வடகிழக்கு ரெயில்வே தனது டுவிட்டர் பக்கத்தில், "சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் அவர் உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளனர்.