? Live: மாண்டஸ் புயல் எதிரொலி: தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு
By Irumporai
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை
அதன்படி, மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் உள்ள புறநகர் ரயில்பாதை, மேம்பாலங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளது.
மேலும் சென்னை மண்டல பேரிடர் தடுப்பு மையம் 24 மணி நேரமும் இயங்கும் என்றும், வானிலை சூழ்நிலைக்கு ஏற்ப சென்னை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவது முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரயில் பயணிகளுக்கான உதவி எண்கள், 044-25330714; 044-25330952 வழங்கப்பட்டுள்ளது .