முன்பதிவில்லா டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி - ஆனால் ஒரு கண்டிஷன்
முன்பதிவில்லா பயண சீட்டுகளை பெறுபவர்களுக்கு 3% போனஸ் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போனஸ் சலுகை
ரயில்வே துறையின் 'ரயில் ஒன்' செயலி மூலம் முன்பதிவில்லா பயண சீட்டுகளை பெறுபவர்களுக்கு 3% போனஸ் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி யணிகள் தங்கள் மொபைல் செயலியில் உள்ள 'வாலட்' மூலம் டிக்கெட் எடுக்கும்போது, செலுத்தப்படும் தொகையில் 3 சதவீதம் கூடுதல் மதிப்பாக திரும்ப பெறலாம்.
முன்பதிவில்லா பயண சீட்டு
ஒருவர் 1000 ரூபாய் தனது வாலட்டில் ரீசார்ஜ் செய்தால், அவருக்கு 1030 ரூபாய்க்கான மதிப்பு கிடைக்கும். இதுமட்டுமின்றி நடைமேடை சீட்டு மற்றும் சீசன் டிக்கெட்டுகளையும் இந்த செயலி மூலம் எளிதாக பெற முடியும்.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும், ரயில் நிலையங்களில் உள்ள பயணச் சீட்டு முன்பதிவு மையங்களில் கூட்ட நெரிசலை குறைக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.