ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் - சுப்பிரமணியன் சுவாமி காட்டம்..!

BJP Odisha Odisha Train Accident
By Thahir Jun 04, 2023 06:04 AM GMT
Report

உடனடியாக ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

ரயில் விபத்து 

ஒடிசாவின் பால்சோர் மாவட்டத்தில் நேற்று முந்தினம் இரவு மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில், 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுள்ளனர். விபத்து எப்படி நடந்தது அதற்கான காரணம் என்னவென்று காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

சுப்பிரமணியன் சுவாமி

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ரயில்வே அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என காட்டத்துடன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Railway Minister should resign - Subramanian Swamy

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது ” ஒடிசாவில் வேகமாக சென்று கொண்டு விபத்துக்குளாளன அந்த ரயில், அந்த தண்டவாளத்தில் செல்ல வேண்டிய ரயிலே இல்லை. அது மெதுவாக செல்லக்கூடிய ரயில்களுக்கான தண்டவாளம் எனும் இப்போது நமக்கு தெரிகிறது.

எனவே பிரதமரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் உடனடியாக ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும். திறமையற்ற, அல்லது பொருத்தமற்ற அமைச்சர்களாக நியமிப்பதில் பிரதமர் மோடி உலகப் புகழ்பெற்றவர். மற்றொரு உதாரணம் என்னவென்றால் மணிப்பூர் கலவரம் தான்” என மிகவும் காட்டத்துடன் பதிவிட்டுள்ளார்.