மதுரை கோட்டத்தில் ரயில்வே பார்சல் கட்டணம் அதிரடியாக குறைப்பு

price reduce mardurai railway parcel
By Praveen May 03, 2021 05:36 PM GMT
Report

மதுரை கோட்டத்தில் ரயில்வே பார்சல் கட்டணம் அதிரடியாக குறைப்பு.

ரயில்வே பார்சல் கட்டணங்கள் ரயிலின் குறிப்பிட்ட வகைக்கேற்பவும் அதன் பயன்பாட்டு சதவீதத்தை பொறுத்தும் நிர்ணயிக்கப்படுகின்றன. கட்டணங்கள் நான்கு வகையாக பெயரிடப்பட்டுள்ளன. அவை ராஜ்தானி, பிரிமியர், ஸ்டாண்டர்ட், மற்றும் லக்கேஜ் ஆகியவையாகும்.

முதல் மூன்றும் பார்சல் கட்டண வகையை சேர்ந்தது. நாம் பயணம் செய்யும் ரயிலிலே பார்சல் எடுத்துச் செல்வதற்கும் அல்லது பயணத்தின்போது எடுத்துச் செல்லும் பொருட்கள் மீதும் விதிக்கப்படுவது லக்கேஜ் கட்டணம் ஆகும். தற்போது மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் சில ரயில்களுக்கான பார்சல் கட்டணம் 'ராஜதானி' வகையிலிருந்து 'பிரிமியர்' வகையாக மாற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் தற்போதைய கட்டணத்திலிருந்து பார்சல் கட்டணம் 33 சதவீதம் குறைகிறது. வண்டி எண் 02662 செங்கோட்டை - சென்னை எழும்பூர் பொதிகை சிறப்பு ரயில்,உள்ளிட்ட பல ரயில்களுக்கான பார்சல் கட்டணம் 33 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணச் சலுகை உடனடியாக அமலுக்கு வருகிறது.