ஆர்டிஐ மூலம் கேட்ட கேள்விகளுக்கு இந்தியில் பதில் அளித்த ரயில்வே வாரியம்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதிலளிக்காமல், இந்தியில் பதில் அளித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த பாண்டியராஜா என்பவர், ரயில்கள் மோதி யானைகள் உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு தகவல்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ரயில்வே வாரியத்திடன் கேட்டுள்ளார்.
அதற்கு பல்வேறு ரயில்வே மண்டலங்கள் ஆங்கிலத்தில் பதிலளித்த நிலையில், வாரணாசி, டெல்லி , பிலாஸ்பூர் ரயில்வே கோட்டங்கள் இந்தியில் பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வாறு இந்தியில் பதிலளித்துள்ளது விதிகளுக்கு புறம்பானது என்பதால், மீண்டும் தகவல்கள் அனைத்தையும் ஆங்கிலத்தில் அனுப்புமாறு மேலதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக பாண்டியராஜா தெரிவித்துள்ளார்.