இடிந்து விழுந்த ரயில்வே பாலம்...17 பேர் உயிரிழப்பு..மிசோராமில் அதிர்ச்சி

India Accident Railways
By Karthick Aug 23, 2023 07:11 AM GMT
Report

மிசோரம் மாநிலத்தில் சாய்ரங் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மிசோரமில் பரிதாபம் 

மிசோரம் மாநிலம் சாய்ரங் என்ற பகுதியில் புதிதாக ரயில்வே பாலம் கட்டப்பட்டு வந்துள்ளது. இந்த கட்டுமான பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இதில் 40'க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர்.

railway-bridge-accident-in-mizoram

இந்நிலையில், இன்று எதிர்பாராதவிதமாக இந்த ரயில்வே பாலம் திடீரென இன்று காலை 10 மணிக்கு இடிந்து விழுந்ததுள்ளது. அப்போது பணியில் இருந்த 17 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது வரை 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

உயிரிழப்பு அதிகரிக்கலாம் 

மேலும், சிலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கும் நிலையில் உயிரிழப்புகள் அதிகரிக்கும் சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இந்த எதிர்பாராத விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடுமபத்திற்கு தலா 2 லட்ச நிதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.