ரெயில் போக்குவரத்தில் மாற்றம் - தென் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

southernrailway railrehabilitation
By Petchi Avudaiappan Dec 24, 2021 12:06 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக வைகை, பல்லவன், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி கோட்டத்தில் உள்ள அரியலூர் ரயில் நிலையத்தில் டிசம்பர் 26ம் தேதி முதல் ஜனவரி 15ம் தேதி வரை ரயில் பாதை சீரமைப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் அந்த பகுதியில் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னையிலிருந்து டிசம்பர் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை மற்றும் டிசம்பர் 31ம் தேதி முதல் ஜனவரி 10ம் தேதி வரை புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில் விருத்தாச்சலம் கார்ட் லைன் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர் மெயின் லைன் வழியாக இயக்கப்படும்.

அதன்படி, மதுரையிலிருந்து வருகிற 30, 31 ஆம் தேதி, அடுத்த மாதம் 6 ஆம் தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ. எண் 12636) மற்றும் குருவாயூரிலிருந்து ஜனவரி 9 ஆம் தேதி புறப்பட வேண்டிய குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் (வ.எண் 16127) ஆகிய ரெயில்கள் மேற்கண்ட நாட்களில் திருச்சியில் இருந்து அரியலூர் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக திருச்சியில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம் பாதை வழியாக இயக்கப்படும்.

அதேபோல் மதுரையில் இருந்து வருகிற 30, 31 ஆம் தேதி மற்றும் ஜனவரி 6 ஆம் தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - சென்னை எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண் 12636) தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இதனால் மேற்கண்ட நாட்களில் சென்னையில் இருந்து காரைக்குடி வரும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12605) தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.