விஜய் கட்சியால் பிரயோஜனம் இல்லை; ஜெயிக்க முடியாது - ரஜினிகாந்தின் அண்ணன் பேட்டி
விஜய் தமிழ்நாட்டில் ஜெயிக்க முடியாது என ரஜினிகாந்தின் அண்ணன் பேசியுள்ளார்.
விஜய்
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் நடத்தினார்.

மாநாட்டிற்கு கூடிய லட்சக்கணக்கானோர் முன்பு தனது கட்சி கொள்கைகள், அரசியல் எதிரி, கொள்கை எதிரி குறித்து விஜய் பேசினார்.
ரஜினிகாந்தின் அண்ணன்
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விஜய்யின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணராவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், "வரட்டும், வரட்டும், கமல்ஹாசன் பண்ணியது போல் அவரும் பண்ணட்டும். எல்லாருக்கும் உரிமை உள்ளது. அவர் ஆசைப்பட்டுள்ளார். ஆனால் பிரயோஜனம் இல்லை. விஜய்க்கு அனுபவம் இல்லை. ஒன்றும் சாதிக்க முடியாது. தமிழ்நாட்டில் ஜெயிக்க முடியாது. இன்னும் கொஞ்சநாள் போகட்டும் பார்க்கலாம். கஷ்டம்" என கூறினார்.
சத்யநாராயணராவ்வின் பேச்சு விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்களை டென்ஷனாக்கி உள்ளது. சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
யாழை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை நாடு கடத்தும் விவகாரம்! மதுரை உயர் நீதிமன்றின் விசேட தீர்மானம் IBC Tamil
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan