மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் ஐடி ரெய்டு: சென்னையில் பரபரப்பு
திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். 4 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதால் பரபரப்பு நிலவுகிறது. சென்னை நீலாங்கரையில் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீடு உள்ளது. இவரது கணவர் சபரீசன்.
இந்த நிலையில் ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் அவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 4 பகுதிகளில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே திருவண்ணாமலையில் திமுக மூத்த தலைவர் எ.வ.வேலு வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் தற்போது சபரீசன் வீட்டில் சோதனையிட்டு வருகின்றனர்.
வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருவதால் வீட்டில் இருக்கக்கூடிய யாரும் வெளியே உள்ளவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு வருமானவரித் துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.