‘‘முடிந்தால் என் வீட்டிலும் ரெய்டு நடத்துங்க’’- சவால் விடும் சீமான்

seeman dmk bjp aiadmk raid
By Jon Apr 03, 2021 10:13 AM GMT
Report

என் வீட்டில்ஒரு முறையாவது வருமானவரித்துறையினர் சோதனை நடத்திப் பாருங்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார். நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகின்றனர். அந்த வகையில் நேற்றும் திருவொற்றியூர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தசீமான், திருவெற்றியூர் தொகுதி பிரச்சினை குறித்து பிரச்சாரங்களில் பேசமாட்டேன். காரணம் 50 ஆண்டு காலமாக திராவிட கட்சிகள் பேசிக்கொண்டு தான் இருக்கின்றனர். நான் வந்தால் பிரச்சினையை தீர்த்து செயலில் ஈடுபடுவேன் என தெரிவித்தார். மேலும், தன்னாட்சி அதிகாரம் பெற்ற வருமான வரித் துறை, அமலாக்கத் துறை உள்ளிட்ட இந்த அமைப்புகளை பிரதமர் மோடி ஐந்து வருடங்களாக பயன்படுத்தி வருவதாக கூறினார்.

‘‘முடிந்தால் என் வீட்டிலும் ரெய்டு நடத்துங்க’’- சவால் விடும் சீமான் | Raid My House Seeman Challenges

தொடர்ந்து பேசிய சீமான், என் வீட்டில் ஒரு முறையாவது வருமானவரித்துறை சோதனை நடத்திப் பாருங்கள் பார்ப்போம் என சவால் விடுத்தார். மேலும், தேர்தல் நேரத்தில் கருத்து கணிப்புகள் மக்களை குழப்புவதாகவும். கருத்து கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என கூறினார்.