செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் எகிறி குதித்த வருமான வரித்துறை - கரூரில் பரபரப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் வீட்டில் உள்ளே வருவமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனை
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
கரூரில் உள்ள அவரது வீடு, சென்னையில் அவர் தங்கியுள்ள அரசு பங்களா உள்ளிட்ட இடங்களிலும் இந்த சோதனை நடத்தி வருகின்றது.
இதனிடையே ரெய்டுக்கு சென்ற பெண் ஐ.டி அதிகாரியை சோதனை செய்யவிடாமல் திமுக கட்சியினர் தடுத்தனர்.
வருமான வரித்துறை
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் தங்கராஜன் என்பவர் இருக்கும் வீட்டில் சோதனை செய்ய வருமான வரித்துறை அதிகாரிகள் முற்பட்டனர்.
அவரது வீடு பூட்டி இருந்தால் அவர்கள் அங்கு சுவற்றில் ஏறி வீட்டிற்குள் குதித்து சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மேலும், பூட்டிய வீட்டிற்குள் எப்படி ஏறி குதித்து வரலாம் என்று திமுகவினர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.