சென்னையில் வெகு விமர்சையாக நடைபெற்ற Chennai Retail Summit 2025
இந்தியாவின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் Chennai Retail Summit 2025, RAI தலைமையில் சென்னையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
Chennai Retail Summit 2025
பிரபல முன்னணி பிராண்டுகளின் நிறுவனர்கள், இயக்குநர்கள் மற்றும் CEO-க்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், Daily Fresh Fruits India Private Limited நிறுவனத்தின் இயக்குநர் திரு.ஐசக் பிரைட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
ஒரு கட்டிடப் பொறியாளராகத் தொடங்கி, பின்பு குளிபானத்துறையில் 30 ஆண்டுகளாக கடந்து வந்த பயணத்தையும், தேசிய அளவிலான FMCG பிராண்டான, 'Dailee'-யை உருவாக்கி, அதில் வளர்ச்சி அடைந்த அனுபவத்தையும் அனைவரிடமும் பகிர்ந்தார்.
"ரூ.10-க்கு 200ml குளிர்பானம் வழங்குவதில், "வாடிக்கையாளருக்கு சிறந்த தரம் மற்றும் குறைந்த விலை" இவை இரண்டையும் ஒன்று சேர தருவதே எங்கள் நிறுவனத்தின் நோக்கம், என்று கூறினார்.
Automation, Sustainability, Trust in Distribution ஆகிய மூலக்கொள்கைகள் கொண்ட ஒரு சிறிய முயற்சியானது, இன்று பான்-இந்தியா பிராண்டாக வளர்ந்ததை எடுத்துரைத்தார்.
Cycle Agarbathies, Naturals, Boomerang Ice Creams, Kaleesuwari, A2B போன்ற முன்னணி பிராண்டுகள் பங்கேற்ற இந்த மேடையில், வணிக வழிகாட்டுதலும், விரிவாக்க வாய்ப்புகளும் பற்றி ஆலோசனைகள் பகிரப்பட்டது.