சைக்கிள் எடுத்தராகுல் .. பரபரப்பான நாடாளமன்றம் நடந்து என்ன?

parliament rahulgandhi bicycle
By Irumporai Aug 03, 2021 05:56 AM GMT
Report

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்து பெகாசஸ், வேளாண் சட்டம், விலை உயர்வு மற்றும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி, அமளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து,நேற்றும் மாநிலங்களவையில் ஆவணங்களை கிழித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.மேலும்,பெகாசஸ் விவகாரத்தால் அவைத் தலைவர் இருக்கையையும் முற்றுகையிட்டனர்.

அந்த வகையில் இன்று,எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூசன் கிளப்பில் பெகாசஸ் உள்ளிட்ட சில விவகாரம் தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இக்கூட்டத்தின் சிறப்பு என்னவென்றால்,14 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர் என்பதே. இந்நிலையில்,எதிர்க்கட்சி எம்பிக்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் சென்றார்.

அவருடன் பிற எதிர்க்கட்சித் தலைவர்களும் சைக்கிளில் பாராளுமன்றத்திற்கு சென்றனர். இந்த நிலையில் பெகாசஸ் சர்ச்சை காரணமாக மநிலங்களவையில் எதிர்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளமன்றம் 12 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.