கொரோனா குறித்து பிரதமர் மோடிக்கு ஒன்றும் தெரியவில்லை... ராகுல் காந்தி கடும் விமர்சனம்..
கொரோனா தொற்று குறித்து மத்திய அரசுக்கும் மோடிக்கும் ஒன்றும் புரியவில்லை என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி திட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி காணொளி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கொரோனா 2வது அலை தாக்கும் என்று பலமுறை நான் எச்சரிக்கை விடுத்ததாகவும், ஆனால் கொரோனாவுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றதாக பிரதமர் மோடி தெரிவித்ததாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
மேலும் ஊரடங்கு உத்தரவு போட்டு கட்டுப்பாடுகளை விதிப்பது மற்றும் முக கவசங்கள் அணிவது தற்காலிக தீர்வுதான். கொரோனா இரண்டாவது அலை இந்த அளவுக்கு பரவுவதற்கு பிரதமரின் அணுகுமுறைதான் காரணம் என்றும் இப்போது வரை பிரதமரோ மத்திய அரசோ கொரோனாவின் தீவிரத்தை புரிந்துகொள்ளவில்லை என்றும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.