நண்பரை நம்பி ஏமாந்த பிரபல நடிகை - அழுது புலம்பும் அவலம்

moneylaundering sanjjanaagalrani
By Petchi Avudaiappan Oct 22, 2021 11:03 PM GMT
Report

தன்னிடம் இருந்து ரூ. 45 லட்சம் மோசடி செய்துவிட்டதாக நண்பர் ராகுல் டோன்சே மீது காவல் நிலையத்தில் நடிகை சஞ்சனா கல்ராணி புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து சஞ்சனா செய்தியாளர்களை சந்தித்த போது, கோவா, கொழும்பு உள்ளிட்ட இடங்களில் இருக்கும் கேசினோக்களில் முதலீடு செய்யுமாறு ராகுல் என்னை ஊக்குவித்தார். அந்த கசினோக்களின் மேனேஜர் நான் தான் என்று என்னிடம் கூறினார். கசினோக்களில் முதலீடு செய்தால் நல்ல வருமானம் வரும் என்று கூறினார்.

ராகுலை நம்பி அவர் பெற்றோரிடம் கடந்த 2018ம் ஆண்டு ரூ. 45 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள். இது தொடர்பாக போலீசாரிடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உதவி கேட்டேன்.

ராகுலிடம் இருந்து பணத்தை வாங்கித் தருமாறு கூறினேன். அவர்களோ உள்ளூர் நீதிமன்றத்தை அணுகுமாறு கூறினார்கள். நீதிமன்றத்திற்கு சென்றபோது காவல் நிலையத்தில் மோசடி புகார் அளிக்குமாறு தெரிவித்தனர் என்றார். இதனால் மீண்டும் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.