ராகுலின் ட்விட்டர் கணக்கு முடக்கம் ஏன்? காங்கிரஸ் அளித்துள்ள புதிய விளக்கம்!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது பிரதமரின் உத்தரவின் காரணமாகவே ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், காங்., கட்சியினர் புது விளக்கம் அளித்துள்ளனர்.
டெல்லியில் 9 வயது தலித் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவாகாரம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய்து. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாரை சந்தித்து காங்.எம்.பி., ராகுல் ஆறுதல் கூறினார்
. இது தொடர்பான படத்தை ட்விட்டர் சமூக வலைதளத்தில் ராகுல் வெளியிடபோக்சோ சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது. அதை மீறியதால் ராகுலின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இது குறித்து பொதுச் செயலர் வேணுகோபால் கூறியுள்ளதாவது: ராகுலின் டுவிட்டர் கணக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளது .குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.. ட்விட்டர் நிறுவனத்தின் நடவடிக்கைக்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது கருத்து சுதந்திரத்தை மீறும் செயல். மற்றவர்கள் வெளியிட்ட இதுபோன்ற படங்களை நீக்காமல், ராகுலின் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து ட்விட்டர் நிர்வாகம் இரட்டை வேடம் போடுகிறது. பிரதமர் நரேந்திர மோடி அரசின் உத்தரவால் தலித் விரோத, பெண்கள் விரோத நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது அனைத்து நிலைகளிலும் இதை எதிர்ப்போம் என கூறியுள்ளார்.