சினிமாவில் இருந்து விலகுவதாக சொன்ன பிரபல நடிகர் - கொந்தளித்த ரசிகர்கள்
நடிகர் ராகுல் ராமகிருஷ்ணா தான் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் அதிலிருந்து பின்வாங்கியுள்ளார். \
கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படம் மூலம் பிரபலமானவர் நடிகர் ராகுல் ராமகிருஷ்ணா. தொடர்ந்து ‘அல வைகுந்தபுரமுலோ’, ‘ஜதிரத்னலு’ உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஸ்கைலேப்’ படத்தில் மிக முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த படம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் ராகுல் ராமகிருஷ்ணா தான் திரைத்துறையிலிருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பு ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டிருந்த பதிவில், 2022 ஆம் தான் எனக்கு கடைசி. இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். இது குறித்து எனக்கு கவலை இல்லை, யாரும் கவலைப்பட வேண்டாம் என கூறியதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பலரும் அவரை நடிப்பில் இருந்து விலக வேண்டாம் என தெரிவித்த நிலையில் தான் அந்தப் பதிவை விளையாட்டுக்கு பகிர்ந்ததாக ராகுல் ராமகிருஷ்ணா கூறியுள்ளார். மேலும் அது ஒரு ஜோக், முட்டாள்களே. அதிக சம்பளம் கிடைக்கக் கூடிய, பலன்கள் நிறைந்த சொகுசான வாழ்க்கையை நான் ஏன் தூக்கி எறியப் போகிறேன்? எனவும் கேட்க கொந்தளித்துள்ள ரசிகர்கள் அவரை கடுமையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து ராகுல் ராமகிருஷ்ணா தனது பதிவை ட்விட்டரில் இருந்து நீக்கியுள்ளார்.