ராகுல் இன்று காலை 11 மணிக்கு புதுச்சேரி வருகிறார்

parliament congress narayanasamy
By Jon Feb 18, 2021 02:13 AM GMT
Report

ஒரு நாள் பயாணமாக புதுச்சேரிக்கு ராகுல் காந்தி இன்று வர இருக்கிறார். புதுச்சேரி அரசியல் பரபரப்பு தற்போது நிலவி கொண்டிருக்கிறது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா செய்திருக்கிறார்கள். இதனிடையே ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு புதுச்சேரிக்கு வரும் ராகுல் காந்தி முத்தியால்பேட்டை சோலை நகரில் மீனவர்களுடன் கலந்துரையாட வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடும் அவர் மாலை 3 மணிக்கு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இச்சூழலில் ராகுல்காந்தி வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


Gallery